இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று (நவ.24) 3-வது நாள் ஆட்டம் டைபெற்று வருகிறது. அபாரமாக விளையாடிய இந்திய அணி 533 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று 161 ரன்கள் எடுத்து அசத்தினார். கே.எல் ராகுல் 77 ரன்கள், படிக்கல் 25, ரிஷப் பண்ட், ஜூரெல் தலா 1 ரன்கள் எடுத்தனர். அதே நேரம் விராட் கோலி சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 5 விக்கெட் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 161 ரன் எடுத்ததன் மூலம் சச்சினின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, 23 வயதினை எட்டுவதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை (4 முறை) ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (8 முறை) முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டத், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் (தலா 4 முறை) உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“