Yashasvi Jaiswal | நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை (மார்ச் 7) டெஸ்டில் 1000 ரன்களை கடந்தார்.இந்த சாதனையுடன் அவர் டெஸ்ட் ரன்களை மிக வேகமாக எட்டிய இரண்டாவது இந்தியர் ஆனார்.
22 ஆண்டுகள் 70 நாள்களை கடந்துள்ள நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் ரன்களில் 1000 ரன்களைக் கடந்த நான்காவது இளைய பேட்டர் ஆவார்.
தொடர்ந்து, இவர், சச்சின் டெண்டுல்கர் (19 வயது 217 நாள்கள்), கபில் தேவ் (21 வயது, 27 நாள்கள்), ரவி சாஸ்திரி (21 வயது), திலீப் வெங்சர்கார் (22 வயது 293 நாள்கள்) போன்ற ஜாம்பவான்களின் பட்டிலில் இணைந்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக 21 இன்னிங்ஸ்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை முடித்தார். இந்தப் பட்டியலில் கவாஸ்கர் 5வது இடத்தில் உள்ளார்.
மயங்க் அகர்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர், வெறும் 19 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்தார்.
சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக சேதேஷ்வர் புஜாரா 18 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை முடித்தார். டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட்டின் இடத்தைப் பிடித்தவராக இவர் அறியப்படுகிறார்.
இந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 14 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்த வினோத் காம்ளி உள்ளார்.
ஜெய்ஸ்வால் 16 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“