மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Yogesh Kathuniya wins India’s 8th medal
இந்நிலையில், பாரிஸ் பாரஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வட்டு எறிதல் எப்-56 இறுதிப்போட்டி இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் யோகேஷ் கத்துனியா கலந்து கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட யோகேஷ் கத்துனியா 42.22 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸ் 46.86 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், கிரீஸின் கான்ஸ்டான்டினோஸ் சூனிஸ் 41.32 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
யோகேஷ் கத்துனியா வென்ற இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“