Advertisment

நீங்கள் என் கைகளையும், கால்களையும் துண்டித்துவிட்டீர்கள் : டேனிஷ் கனேரியா

டேனிஷ் கனேரியா: தங்கள் நாட்டை விற்றவர்கள், இன்னும்  அணியில் வரவேற்கப்படுகிறார்கள். நான் ஒருபோதும் எனது நாட்டை பணத்திற்காக விற்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
danish kaneria, danish kaneria pakistan, கனேரியா, danish kaneria

danish kaneria, danish kaneria pakistan, கனேரியா, danish kaneria

சனிக்கிழமையன்று பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாகுபாடு காட்டப்படுவதாக டேனிஷ் கனேரியா சில புதிய கூற்றுக்களை தெரிவித்தார். யூடியூபில் வெளியான வீடியோவில் பேசிய கனேரியா, கடந்த சில நாட்களாக  பேசப்பட்டு வரும் விஷயம் தொடர்பாக இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இதயத்தில் சில கவலைகள் இருப்பதாக கூறினார்.

Advertisment

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டாத், பாகிஸ்தானில் கனேரியா அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகவும், அவர் ‘பணத்திற்காக எதையும் செய்ய முடியும்’ என்றும் கூறியிருந்தார்.

மியாண்டாட்டின் பெயரை வெளிப்படையாக சொல்லாத கனேரியா வீடியோவில், “மலிவான புகழுக்காகவும், யூடியூப் சேனலுக்காகவும் இதைச் செய்தேன் என்று சொல்பவர்களுக்கு, நான் இதை முதலில் கூறவில்லை, ஷோயப் அக்தர் தான்  எனக்கு எதிரான பாகுபாடு குறித்து தேசிய தொலைக்காட்சியில் பேசினார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்..."

ஓய்வு பெற்றதிலிருந்து கிரிக்கெட் சமூகம் மற்றும் தொலைக்காட்சி சேனல்களால் அவர் எவ்வாறு தவறாக நடத்தப்பட்டார் என்பது குறித்து கனேரியா கூறுகையில், “நீங்கள் என் கைகளையும் கால்களையும் துண்டித்துவிட்டீர்கள். நான் இவ்வளவு காலமாக எனது அடையாளத்தை இழந்து வாழ்கையின்  பின்னுக்குத் தள்ளப்பட்டேன் . இன்னும் உங்களுக்கு வேறு ஏதேனும்  வேண்டுமா? நான் என்னையும்/ எனது வாழ்க்கையும்  முடித்துக் கொள்ள வேண்டுமா? " என்றார்.

டேனிஷ் கனேரியா சர்ச்சை குறித்து மனம் திறந்த இன்சமாம் உல் ஹக்

அவர் மேலும் கூறுகையில்,“நான் 10 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் எனது இரத்தத்தை விலையாய்க் கொடுத்து இந்த 10 ஆண்டுகள் விளையாடினேன். எனது ரத்தத்தை(உழைப்பை) இந்த மைதானத்திற்கு கொடுத்தேன். என் விரல்கள் இரத்தம் கசியும் போதும் நான் பந்து வீசினேன். ”

"தங்கள் நாட்டை விற்றவர்கள், இன்னும்  அணியில் வரவேற்கப்படுகிறார்கள். நான் ஒருபோதும் எனது நாட்டை பணத்திற்காக விற்கவில்லை, ”என்றும் அவர் கூறினார். ( முகமது அமீரை தேசிய அணியில் மீண்டும் இணைக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்).

இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த டேனிஷ் கனேரியாவுடன் உணவு சாப்பிட மறுத்துவிட்டதாகவும், கனேரியா தனது நம்பிக்கையின் காரணமாக சில வீரர்களால் மோசமாக நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

Pakistan Danish Kaneria
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment