scorecardresearch

புள்ளிப் பட்டியல் முக்கியமல்ல, ஆட்டத்தை ரசிப்பதே முக்கியம்: எம். எஸ் தோனி

”தரவரிசைப்பட்டியலில் எந்த இடத்திலும் இருந்தாலும் சரி, களத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.”

புள்ளிப் பட்டியல் முக்கியமல்ல, ஆட்டத்தை ரசிப்பதே முக்கியம்: எம். எஸ் தோனி

ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவுடன் மோதிய சென்னை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவருக்கு 145 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய, சென்னை அணி, 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு  146 ரன்களை எளிதில் கடந்தது.

கொல்கத்தா அணி தற்போது 12 புள்ளிகளை பெற்றுள்ளன. வரும் திங்களன்று நடைபெறும் பஞ்சாப் அணியுடன் வென்றால், கொல்கத்தா அணி 14 புள்ளிகளை பெற்று விடும். ஐ. பி. எல் தொடரில் ஏற்கனவே மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் ஏற்கனவே 14 புல்லிகளுடன் முன்னிலையில் உள்ளன.  மறுபுறம், சென்னை அணி அடுத்த மூன்று ஆட்டங்களிலும்  வென்றாலும் 12 புள்ளிகளை மட்டும் தான் பெற முடியும். எனவே, சென்னை அணியின் ஐ. பி. எல் கனவு நாளையோடு (26ம் தேதி) முடிவடைகிறது

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “சென்னை அணியின் அடுத்த இரண்டு ஆட்டங்களும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.  தரவரிசைப்பட்டியலில் எந்த இடத்திலும் இருந்தாலும் சரி, களத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆட்டத்தை ரசிக்கவில்லை என்றால், அது கொடூரமாகவும் வேதனையாகவும் மாறும். இந்த ஆட்டத்தில், இளம் வீரர்களின் ஆட்டம் திருப்திகரமாக இருந்தன” என்று தெரிவித்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரையும் தோனி வெகுவாகப்  பாராட்டினார்.

இன்று, அபுதாபியில் நடைபெறும் மற்றொரு போட்டியில் மும்பை அணி – ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: You have to enjoy the game no matter where you are on the table says ms dhoni