Advertisment

யுவராஜ் கொடுத்த அறிவுரை… ஷுப்மன் கில் அபார சதம் ரகசியம் இதுதான்!

Shubman Gill became the third youngest Indian to score an ODI century abroad after Yuvraj and Virat Kohli Tamil News: முன்னாள் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் குறித்து பேசியுள்ள கில் அவரின் அறிவுரை தான் அவர் சதமடித்தற்கான ரகசியமாய் இருந்து என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Yuvraj Singh advice to Shubman Gill to score ton in Zimbabwe series

Indian batsman Shubman Gill celebrates after scoring 100 runs on the last day of the One-Day International cricket match between Zimbabwe and India at Harare (Source/AP)

Yuvraj Singh - Shubman Gill Tamil News: இந்திய அணியில் முன்னணி வீரராக வலம் வருகிறார் இளம் வீரர் ஷுப்மன் கில். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் தற்போது வரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 499 ரன்களும், டெஸ்டில் 579 ரன்களும் எடுத்துள்ளார்.

Advertisment

பொதுவாக, ஷுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடுபவர். ஆனால், இந்திய அணியில் கேஎல் ராகுல், கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றெடுத்தார் கில்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 64, 43, 98 என மொத்த 205 ரன்களை எடுத்து இருந்திருந்தார். இதில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் ஆட்டத்தில், மழையின் குறுக்கீடு காரணமாக அவர் சதமடிக்க தவறினார். ஆனால், அந்த சத தாகத்தை அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தீர்த்துக்கொண்டார் என்றே கூறலாம். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கில் 82 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்தார்.

கடந்த 22ம் தேதி நடந்த ஆட்டத்தில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார் கில். தொடரில் மொத்தமாக 245 ரன்கள் குவித்து தொடரின் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அவரின் இந்த திறன்மிகு ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் புகழப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் தனது சார்பில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில், "இறுதியாக!!! நன்றாக விளையாடினாய் சுப்மன் கில். நீங்கள் அந்த சதத்திற்கு மிகவும் தகுதியானவர் உங்களின் முதல் 💯 இன்னும் பல வருவதற்கு வாழ்த்துக்கள் இது ஒரு தொடக்கம்தான்" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் குறித்து பேசியுள்ள கில் அவரின் அறிவுரை தான் அவர் சதமடித்தற்கான ரகசியமாய் இருந்து என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ பதிவேற்றிய வீடியோவில் கில், "ஜிம்பாப்வேக்கு வருவதற்கு முன்பு நான் அவரை (யுவராஜ்) சந்தித்தேன். நீங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள். அங்கு செல்லும்போது, நீங்கள் செட் ஆனதும், பேட்டிங் செய்ய பாருங்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.

நான் அவரிடம் ‘100 நஹி ஆ ரஹா’ (எனக்கு அந்த நூறு கிடைக்கவில்லை) என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவருடைய பதில் ‘கவலைப்படாதே, அது வந்துவிடும்’ என்பதுதான்." என்று கில் கூறியிருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்த பிறகு தனது முதல் சதத்தை எட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட கில், யுவராஜ் மற்றும் விராட் கோலிக்கு பிறகு வெளிநாட்டில் ஒருநாள் சதம் அடித்த மூன்றாவது இளைய இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

publive-image
ஷுப்மன் கில்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் கில், 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டு 130 ரன்கள் குவித்தார். ஆட்டத்திற்கான ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் ஆக தேர்வு செய்யப்பட்ட அவர், போட்டிக்கு பின் இஷான் கிஷானுடனான சேட்டிங்கில், "இது பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட். எனக்கு உங்களுடைய பார்ட்னர்ஷிப் கிடைத்தது. அதிர்ஷ்டம் எனக்கு சாதகமாக இருந்தது. எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது எனக்கு முக்கியமானது, நான் அதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார்.

மேலும் அவர், ஆட்டம் சற்று இறுக்கமாக இருந்தது. விளையாட்டு இவ்வளவு ஆழமாக செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இதுதான் கிரிக்கெட் பற்றியது. பந்து காற்றில் சென்றபோது, ​​முதலில் நான் நினைத்தேன், 'சரி, அது எனக்கு எளிதான வேகத்தில் வரப்போகிறது'. ஆனால் பந்து குழைந்து, ‘கீழே விழக்கூடாது’ என்பது போல் இருந்தது. அதனால் நான் கேட்ச் எடுக்க டைவ் செய்தேன்." என்று கில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் குறித்தும் பேசியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Zimbabwe Yuvraj Singh Shubman Gill
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment