Advertisment

'எனது மகனின் வாழ்க்கையை அழித்தவர்; அவரை மன்னிக்கவே மாட்டேன்': தோனி மீது பாய்ந்த யுவராஜ் தந்தை

முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ் தோனியை கடுமையாக சாடியுள்ள யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தன்னுடைய மகன் யுவராஜ் சிங் கேரியரை தோனி அழித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Yuvraj Singh father Yograj Singh on MS Dhoni Tamil News

"என் மகனின் வாழ்க்கையை அழித்த தோனியை மன்னிக்க மாட்டேன். இந்திய அணிக்காக இன்னும் 5 ஆண்டுகள் விளையாடியிருப்பார், அதை தோனி கெடுத்து விட்டார்" என்று யுவராஜின் தந்தை யோக்ராஜ் காட்டமாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்தவர் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங். இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இந்தியாவுக்காக 398 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 11,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். தனது சுழல் மாயாஜலத்தால் 180 விக்கெட்டுகளுக்குமேல் கைப்பற்றியுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Yograj Singh on MS Dhoni: ‘He destroyed the life of my son (Yuvraj Singh)’

யுவராஜ் சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

இந்தத் தொடரின் போது புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் நாட்டுக்காக ஆடி கோப்பையை முத்தம்மிட செய்தார் என்பதை  யாராலும் மறக்க முடியாது. அதன்பின், அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் மிகச்சிறந்த போராளியாக கருதப்படும் யுவ்ராஜ் சிங் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ் தோனியை கடுமையாக சாடியுள்ள யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தன்னுடைய மகன் யுவராஜ் சிங் கேரியரை தோனி அழித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், யுவராஜ் சிங் புற்றுநோயுடன் போராடி இந்தியாவுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல உதவினார் என்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

 இதுதொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் ஜீ ஸ்விச் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் தோனியை மன்னிக்க மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பெரிய கிரிக்கெட்டரான அவர் எனது மகனுக்கு எதிராக செய்த விஷயங்கள் தற்போது வெளிவருகிறது. என்னுடைய வாழ்வில் அவரை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்னுடைய வாழ்வில் 2 விஷயங்களை செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கிழைத்தவர்களை எப்போதும் நான் மன்னித்ததில்லை. இரண்டு அவர்கள் எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எனது வாழ்நாளில் எப்போதும் அவர்களை மறக்க மாட்டேன்.

இன்னும் 5 - 6 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டிய எனது மகனின் வாழ்க்கையை தோனி அழித்து விட்டார். சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயுடன் நாட்டுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். 

கபில் தேவ் மீதும் பாய்ந்த யோகராஜ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவையும் விட்டுவைக்காத யோகராஜ், “நம் காலத்தின் தலைசிறந்த கேப்டன் கபில்தேவ். உலகம் உங்களை சபிக்கும் நிலையில் உங்களை விட்டுவிடுவேன் என நான் அவரிடம் சொன்னேன். இன்று, யுவராஜ் சிங்கிற்கு 13 கோப்பைகள் உள்ளன. உங்களிடம் ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டுமே உள்ளது. விவாதம் முடிந்தது,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Yuvraj Singh Indian Cricket Team Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment