Advertisment

'இந்த சி.எஸ்.கே வீரரை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கணும்': பி.சி.சி.ஐ-க்கு யுவராஜ் வேண்டுகோள்

ஐ.பி.எல் முடிந்ததும் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஷிவம் துபேவை பி.சி.சி.ஐ தேர்வாளர்கள் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Yuvraj Singh  Message To BCCI Selectors On CSK  Shivam Dube Tamil News

கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே ஷிவம் துபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Yuvraj Singh | Shivam Dube | Chennai Super Kings | IPL 202417-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

Advertisment

இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடி காட்டிய ஆறுச்சாமி 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ரசிகர்களால் ஆறுச்சாமி என செல்லமாக அழைக்கப்படும் சென்னை அணி வீரர் ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். அவர் மட்டும் 45 ரன்கள் அடிக்கவில்லை என்றால் சென்னை அணி 150 ரன்களை கடந்திருக்காது. இந்த ஆட்டம் மட்டுமின்றி கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே ஷிவம் துபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஐ.பி.எல் முடிந்ததும் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஷிவம் துபேவை பி.சி.சி.ஐ தேர்வாளர்கள் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பீல்டிங்கை எளிதாகக் கடந்து விளையாடும் ஷிவம் துபேவை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கேம் சேஞ்சராக இருப்பதற்கு தேவையான அனைத்து திறனும் அவரிடம் இருக்கிறது." என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Yuvraj Singh IPL 2024 Shivam Dube
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment