இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்தவர் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங். இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்திருக்கிறார். இந்திய அணிக்காக 398 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ், 11,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். தனது சுழல் மாயாஜலத்தால் 180 விக்கெட்டுகளுக்குமேல் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக அறிமுகமான யுவராஜ் சிங், இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும், இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சிலவை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Yuvraj Singh recalls dating an actress who followed him during Australia tour 16 years ago
இந்நிலையில், யுவராஜ் சிங் 2007-08 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகை ஒருவரை டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. இந்த நிலையில், அந்த நடிகை உடனான டேட்டிங் பற்றி சமீபத்திய நேர்காணலில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நடிககையின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய யுவராஜ், 2007-08 இல் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்காக தான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, அந்த நடிககையும் அங்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தாகவும், ஒரு கட்டத்தில், அவரைப் பின்தொடர்ந்து கான்பெர்ராவுக்குச் சென்றதாகவும் கூறினார்.
அவர் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக அந்த நடிகை கூறியுள்ளார். கான்பெராவில் தனது கடைசி இரவில், அந்த நடிகை தன்னைப் பார்க்க வந்ததாகவும், அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அதன் பிறகு, அந்த நடிகை தனது சூட்கேஸைக் பேக் செய்ததாகவும் யுவராஜ் கூறியுள்ளார்.
கிளப் ப்ரேரி ஃபயர் போட்காஸ்ட்டில் யுவராஜ் சிங் பேசுகையில், "தற்போது அந்த நடிகை நல்ல நிலையில் இருக்கிறார். மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார் அவர் அடிலெய்டில் படப்பிடிப்பில் இருந்தாக என்னிடம் கூறினார். நான் அவரிடம், 'தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சிறிது நாட்கள் சந்திக்க வேண்டாம். போட்டியில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.' என்று சொன்னேன்.
ஆனால், அவர் என்னைப் பின்தொடர்ந்து கான்பெர்ராவுக்கு பேருந்தில் வந்தார். இரண்டு டெஸ்டில், நான் அதிக ரன்கள் எடுக்கவில்லை. நான், ‘இங்கே என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். அவர் ‘நான் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு என்னுடன் இருந்தார்.
ஒரு நாள் இரவில் நான் அவரை சந்தித்தேன். அப்போது நான் அவரிடம், 'நீ உன் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நான் என்னுடைய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நான் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன், அதன் அர்த்தம் உனக்கே தெரியும்' என்று சொன்னேன். எப்படியிருந்தாலும், நாங்கள் இருவரும் கான்பெராவிலிருந்து அடிலெய்டுக்கு புறப்பட்டோம், அவர் என் சூட்கேஸை பேக் செய்தார்.
மறுநாள் காலையில், நாங்கள் ஏர்போர்ட் செல்லவிருந்தபோது, அவரிடம் எனது ஷூ-க்களைப் பற்றிக் கேட்டேன். ஆனால் அவர் ஏற்கனவே அவற்றைப் பேக் செய்துவிட்டதாக கூறினார். நான் பஸ்ஸில் எப்படி செல்வேன்?’ என்று கேட்டேன், ‘என்னுடையதை அணியுங்கள்’ என்றார். அவரிடம் இந்த பிங்க் நிற ஸ்லிப்-ஆன்கள் இருந்தன. மேலும் நான், 'கடவுளே' என்பது போல் இருந்தேன். நான் அந்த பிங்க் ஸ்லிப்-ஆன்களை அணிய வேண்டியிருந்தது, அவற்றை மறைக்க என் காலணிகளுக்கு முன்னால் என் பையை எடுத்துச் சென்றேன். அதைப் பார்த்தவர்கள் எனக்காக கைதட்டினர். நான் ஏர்போர்ட்டிற்கு ஃபிளிப்-ஃப்ளாப்களை வாங்கும் வரை பிங்க் ஸ்லிப்-ஆன்களை அணிய வேண்டியிருந்தது." என்று அவர் கூறினார்.
2007-08 காலக் கட்டத்தில் பாலிவுட் நடிகை கிம் சர்மாவுடன் யுவராஜ் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் 2008 இல் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். 2016 இல் நடிகை ஹேசல் கீச்சை யுவராஜ் மணந்தார். இந்த தம்பதிக்கு ஓரியன் என்கிற மகனும், ஆரா எனும் மகளும் உள்ளனர். 2019ல் யுவராஜ் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“