scorecardresearch

களத்தில் மீண்டும் யுவராஜ்: பறக்கும் சிக்ஸர்கள்; வீடியோ

Yuvraj Singh is likely to return to the field in the second season of the Road Safety Series Tamil News: வீடியோவில் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சி செய்வதையும், அப்போது வீசப்படும் பந்துகளை தனது ஸ்டைலில் சிக்ஸர்களாக பறக்கவிடுவதையும் காணலாம்.

களத்தில் மீண்டும் யுவராஜ்: பறக்கும் சிக்ஸர்கள்; வீடியோ
In the video Yuvraj Singh can be seen doing batting practice and hitting some lusty blows, giving a glimpse of a vintage Yuvi Tamil News

Yuvraj Singh Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் (39). கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அணியில் அடி வைத்த இவர், பல சர்வதேச போட்டிகளில் திருப்பு முனையை ஏற்படுத்தி வீரர் என்ற பெருமை பெற்றவர். தனது அசாத்திய அதிரடியால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார்.

இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ், ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இவரின் சில சாதனைகள் இன்றுவரை எந்த இந்திய வீரராலும் முறியடிக்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.

Cricket news in tamil: Yuvraj Singh hints at return to 'pitch hopefully in February'

சக வீரர்களாலும், ரசிகர்களாலும் என யுவி செல்லமாக அழைக்கப்படும் யுவராஜ் சிங் கடந்த 2011ம் நடந்த 50ஓவர் உலககோப்பை தொடரின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த அவர் சரியான ஃபார்மில் இல்லை என அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் யுவராஜ் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தார்.

களத்தில் மீண்டும் யுவராஜ்…

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான சாத்தியம் குறித்த பெரிய க்ளுவை விட்டுச்சென்றுள்ளார். அந்த வீடியோவில் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சி செய்வதையும், அப்போது வீசப்படும் பந்துகளை தனது ஸ்டைலில் சிக்ஸர்களை பறக்கவிடுவதையும் காணலாம். மேலும், பழைய யுவி போல் அவர் பலவிதமான ஷாட்டுகளை அடித்து நொறுக்குவதையும் நாம் பார்க்கலாம்.

இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபரில் நடைபெறும் சாலை பாதுகாப்பு தொடரின் இரண்டாவது சீசனில் யுவராஜ் மீண்டும் களமிறங்க இருக்கிறார். இந்த போட்டிகள் லக்னோ, ஜோத்பூர், கட்டாக் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 10 முதல் 15 வரையிலான முதல் ஏழு போட்டிகளை லக்னோ நடத்தும், அதற்கு முன் செப்டம்பர் 16 முதல் 19 வரையிலான அடுத்த ஐந்து ஆட்டங்கள் ஜோத்பூரில் நடக்கவுள்ளன. மேலும், கட்டாக் அடுத்த ஆறு ஆட்டங்களை செப்டம்பர் 21 முதல் 25 வரை நடத்தவுள்ளது.

சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர் அட்டவணை:

செப்டம்பர் 10 முதல் 15 வரை, லக்னோ – 7 போட்டிகள்.

செப்டம்பர் 16 முதல் 19 வரை, ஜோத்பூர் – 5 போட்டிகள்.

செப்டம்பர் 21 முதல் 25 வரை, கட்டாக் – 6 போட்டிகள்.

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை, ஹைதராபாத் – கடைசி லெக் மற்றும் நாக் அவுட்கள்.

இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்திய ஜாம்பவான்கள், ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள், இலங்கை ஜாம்பவான்கள், மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான்கள், தென்ஆப்பிரிக்கா ஜாம்பவான்கள், வங்கதேச ஜாம்பவான்கள், இங்கிலாந்து ஜாம்பவான்கள், நியூசிலாந்து ஜாம்பவான்கள் பங்கேற்கின்றனர். சாலைப் பாதுகாப்புத் தொடரின் முதல் சீசன் கொரோனா பரவுவதற்கு முன்பு 2020 இல் விளையாடப்பட்டது. இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் சீசனை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Yuvraj singh returns to cricket thrilling video goes viral

Best of Express