யுவராஜ் சிங்... இந்த பெயரை எங்கயோ கேட்டது போல இருக்குல... இருக்கும், இருக்கும்.... ஏன் இருக்காது? இந்திய அணி இனி இவரைப் போன்றதொரு அதிரடியான கிரிக்கெட் வீரரை களமிறக்க முடியுமா? என்ற கேள்வியை ஒருமுறை கேட்டுப் பார்த்தாலே, அவரது வேல்யூ என்னவென்பது தெரிந்துவிடும்.
Advertisment
அதேசமயம், கேன்சர் பாதிப்புக்கு பிறகு மீண்டு வந்த யுவராஜ் அதன் பின் 'தொடர்ச்சியாக' சாகசங்களை நிகழ்த்த தவறிவிட்டார் என்பதை இங்கு ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
ஃபிட்னஸும் அவர் சிறப்பாக கையாளவில்லை. அதிலும், கோலி மாதிரி ஃபிட்னஸில் மிகக் கடினமான கேப்டனைக் கொண்ட இந்திய அணியில், யுவராஜ் சிங்கால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஓய்வுப் பெற வேண்டிய வயது தான் என்றாலும், கடந்த 7, 8 வருடங்களாக அவரது இன்னிங்ஸை, அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸர்களை, மனசாட்சியே இல்லாத காட்டடியை இந்திய ரசிகர்கள் பெரிதும் மிஸ் செய்துவிட்டனர்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வுப் பெற்ற பிறகு, தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் யுவராஜ் விளையாடி வருவது நம்மில் பலருக்குமே தெரியாது. மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ், இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி 20 ரன்கள் அடித்துள்ளார்.
அதில் 2 சிக்ஸர்கள்.
இப்படித் தான்... இப்படித்தான் சிக்ஸ் அடிக்குறது, ஆனா அதை பெரிய ஸ்கோரா கன்வெர்ட் செய்யாமல் போயிடுறது. இதனால் தானே, தாங்கள் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டீர்கள் யுவராஜ்!
இருந்தாலும், அந்த இரண்டு சிக்ஸரும் நமக்கு நாஸ்டாலஜி யுவராஜை நினைவுப்படுத்திகிறது.