சாதிரீதியான விமர்சனம்: கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்!
casteist remark; former India cricketer yuvraj arrested, released on bail over Tamil News: சாதி ரீதியாக சில வார்த்தைகளை குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
Yuvraj Singh Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மாவுடன் சமூகவத்தலைத்தளமான இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் மற்றொரு வீரர் குறித்து பேசுகையில் சாதி ரீதியாக சில வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார்.
Advertisment
இதையடுத்து, வழக்கறிஞர் ரஜத் கல்சன் என்பவர் ஹன்ஸி நகர காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதில் அவர் “முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்வின் போது மற்றொரு வீரரைக் குறிப்பிடுகையில் பட்டியலின சமூகத்தினர் மனம் புண் படியாக பேசியுள்ளார். அதோடு இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்." என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் என் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன், அது தேவையற்றது. எவ்வாறாயினும், ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்." என்று ட்வீட் செய்திருந்தார்.
Advertisment
Advertisement
இதற்கிடையில் ஹன்சி காவல் நிலையத்தில் 153 ஏ மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 3 மணிநேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஹரியானா காவல்துறை கூறுகையில் "யுவராஜ் சிங் ஹிசாரில் உள்ள ஹன்சி நகருக்குச் சென்றபோது முறையாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்." என்றனர்.
"யுவராஜ் சிங் சனிக்கிழமை ஹன்சிக்கு வந்தார், நாங்கள் முறையான கைது செய்தோம். சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ”என்று டிஎஸ்பி (ஹன்சி) வினோத் சங்கர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil