‘அந்த எலியை தூக்கி அப்படி உள்ள வை குமாரு’ – சாஹலை கலாய்த்த சேட்டை சிங் (வீடியோ)

இந்திய அணியில் தோனி எப்போதும் சீரியஸ் டைப். அவருக்கு நெருக்கமான வீரர்களிடம் மட்டுமே மனுஷன் ரியல் கேரக்டரை காட்டுவதெல்லாம். அவருடைய கேரக்டர் செட் ஆகாத வீரர்கள் தோனியின் அட்வைஸ் கேட்டுக் கொள்வதோடு சரி. கோலியும் கிட்டத்தட்ட அப்படித் தான். ஆனால், சீரியஸ் டைப் கிடையாது. கொஞ்சம் ஹைஃபை டைப். புரியும்படி சொல்ல வேண்டுமெனில் சீன் பார்ட்டி. ஆனால், அவருக்கென்று ஒரு வீரர்கள் கூட்டம் உள்ளது. அதாவது, கோலி கேங்… உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி? – […]

Yuvraj Singh Trolls Yuzvendra Chahal's Workout Drill
Yuvraj Singh Trolls Yuzvendra Chahal's Workout Drill

இந்திய அணியில் தோனி எப்போதும் சீரியஸ் டைப். அவருக்கு நெருக்கமான வீரர்களிடம் மட்டுமே மனுஷன் ரியல் கேரக்டரை காட்டுவதெல்லாம். அவருடைய கேரக்டர் செட் ஆகாத வீரர்கள் தோனியின் அட்வைஸ் கேட்டுக் கொள்வதோடு சரி.

கோலியும் கிட்டத்தட்ட அப்படித் தான். ஆனால், சீரியஸ் டைப் கிடையாது. கொஞ்சம் ஹைஃபை டைப். புரியும்படி சொல்ல வேண்டுமெனில் சீன் பார்ட்டி. ஆனால், அவருக்கென்று ஒரு வீரர்கள் கூட்டம் உள்ளது. அதாவது, கோலி கேங்…

உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி? – வங்கதேச வீரர்கள் ரீவைண்ட் (வீடியோ)

சில வீரர்கள் மட்டுமே, இப்படியும் அல்லாமல், அப்படியும் அல்லாமல் ‘வாடா மச்சான்’ மோடில் இருப்பார்கள். ரெய்னா, சேவாக், ஹர்பஜன், ரோஹித் உள்ளிட்டோர் இந்த லிஸ்டில் உள்ள வீரர்கள். குறிப்பாக யுவராஜ் சிங்.

அணியில் சேட்டை மன்னர்களில் இவரும் ஒருவர். அவ்வளவு ஜாலி டைப். சச்சின், கங்குலி என பாகுபாடின்றி சீனியர் வீரர்களை ஒரு எல்லை வரை கலாய்ப்பவர். ஆனால், லக்ஷ்மன், டிராவிட்டிடம் அந்தளவுக்கு சுதந்திரம் கிடையாது.

ஏனெனில், அவர்கள் இருவரையும் மற்ற இளம் வீரர்கள் ஆசிரியர்களை போலவே பாவிப்பார்கள். சீரியஸாக அட்வைஸ் சொல்வதோடு லக்ஷ்மன், டிராவிட் பெரும்பாலும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில்லை. ஆனால், சச்சின், கங்குலி, சேவாக் ஆகியோர் தங்களை கலாய்ப்பதையும் ரசிப்பார்கள். அவர்களும் ஜூனியர்களை கிண்டல் செய்வார்கள்.

‘ஒரேயொரு ஐபிஎல் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை மாற்றிவிடும்’ – சஞ்சு சாம்சன்

இந்த லாக்டவுன் நேரத்தில், ‘தூள்’ விவேக் மாதிரி ஏகப்பட்ட டூல்ஸ்களை கொண்டு உடற்பயிற்சி செய்வது போல் ‘இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் வலிமை .. !!” என்ற கேப்ஷனுடன் வீடியோ வெளியிட்டு, யுவராஜிடம் மொக்கை வாங்கியிருக்கிறார் யுவேந்திர சாஹல்.


தனது பைசப்ஸை டெவலப் செய்ய ஏகப்பட்ட டூல்ஸ்களுடன் பயிற்சி செய்வது போல் சாஹல் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளித்திருக்கும் யுவராஜ், அவரது பைசப்ஸை ‘எலி’யுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yuvraj singh trolls yuzvendra chahals workout drill

Next Story
உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி? – வங்கதேச வீரர்கள் ரீவைண்ட் (வீடியோ)bangladesh cricket, india bangladesh cricket, mashrafe mortaza, tamim iqbal, mahmudullah riyadh, virender sehwag, cricket world cup, india cricket, andre russell, cricket news, cricket live chat, cricketers live chat, தமீம் இக்பால், விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com