Yuvraj singh tweets saddened by father's statement over farmers agitation : இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பிறந்த நாளை டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்காக அர்பணிப்பதாக கூறிய அவர், விவசாயம் இந்த நாட்டின் உயிர்நாடி. அவர்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிமெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு, “விவசாயிகள் மிகவும் சரியான விசயத்தை கோரிக்கையாக முன் வைக்கின்றனர். அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தாங்கள் இந்த அரசிடம் இருந்து பெற்ற விருதுகள் அனைத்தையும் திரும்பி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் சிங் கூறியிருந்தார். விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று டெல்லி எல்லையில் அவர் பேசிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை பெற்றது. அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி #ArrestYograjSingh என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதற்கு பதில் கூறும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள யுவராஜ், தந்தையின் கருத்தால் நான் வருத்தம் அடைகின்றேன். அவரது கருத்து தனிப்பட்ட கருத்து. என்னுடைய கருத்துகளும் அவருடைய கருத்துகளும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil