Advertisment

'கரியரை காலி செய்த கோலி'… ஜாகீர் கானை கை காட்டிய இஷாந்த்: உடனடி பதிலடி

இஷாந்த் சர்மா கூறுவது போல், கோலியிடம் தான் அப்படி கூறவே இல்லை என்று கூறி உடனடி பதிலடி கொடுத்துள்ளார் ஜாகீர் கான்.

author-image
WebDesk
New Update
Zaheer Khan on Ishant Sharma claim Virat Kohli Tamil News

Zaheer Khan on Ishant Sharma claim Tamil News: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஒரு டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை வியாழக்கிழமை (27ம் தேதி) தொடங்குகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் இருந்த இஷாந்த் சர்மா முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் குறித்து பேசினார். 2014-ல் பிரெண்டன் மெக்கலத்தின் கேட்ச்சை விராட் கோலி கைவிட்டபோது, ஜாகீர் கான், விராட் கோலியிடம் ‘கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டீர்களே’ என்று கேலியாக கூறியதாக இஷாந்த் சர்மா கூறினார். ஆனால், தான் அப்படி கூறவே இல்லை என்று கூறி உடனடி பதிலடி கொடுத்தார் ஜாகீர் கான்.

நியூசிலாந்தின் வெலிங்டனில் நடந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மெக்கல்லம் முச்சதம் அடித்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஜியோ சினிமாவில் பேசிய இஷாந்த் சர்மா, "நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த டெஸ்ட் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் 300 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகீர் கான் வீசிய பந்தில் கோலி கேட்சை கைவிட்டடார். அப்போது, ​​​​மதிய உணவின் போது நடந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. விராட் ஜாகீரிடம் மன்னிப்புக் கூறினார். ஜாகீர் அவரிடம் ‘கவலைப்பட வேண்டாம், அவரை அடுத்த இன்னிங்சில் அவுட் ஆக்குவோம்’ என்றார். தேநீர் இடைவேளையின் போது, ​​கோலி மீண்டும் மன்னிக்கவும், கவலைப்பட வேண்டாம் என்று ஜாகீரிடம் கூறினார். மூன்றாவது நாளில், தேநீர் இடைவேளையின் போது கோலி மன்னிப்புக் கேட்டபோது, ​​ஜாகீர் அவரிடம், 'நீங்கள் என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டீர்களே என்றார்" என்று இஷாந்த் சர்மா கூறினார்.

பின்னர் இந்த உரையாடலின் போது இணைந்த ஜாகீர், “நான் அப்படிச் சொல்லவில்லை. ரெண்டு பேர்தான் இருந்தாங்க என்றேன். முதலில் கிரஹாம் கூச் கேட்சை கிரண் மோரே விட்டார். அதனால் அவர் 300 ரன் எடுத்தார். அதன் பிறகு கேட்சை விட்டது விராட் கோலி தான். அதன்மூலம் ஒருவர் 300 ரன்கள் எடுத்து விட்டார். பிறகு, அப்படி பேச வேண்டாம் என்று இயல்பாகச் சொன்னார். அவர் அதைப் பற்றி நன்றாக உணர்ந்திருக்க மாட்டார். அங்கு கேட்ச் கைவிடப்பட்டது மற்றும் ரன்கள் எடுக்கப்பட்டது." என்று பதிலடி கொடுத்தார் ஜாகீர் கான்.

இந்த தொடரில் இந்தியா சிறப்பான நிலையில் இருந்தது மற்றும் தொடரை சமன் செய்யம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மெக்கல்லமின் மிரட்டலான ஆட்டம் போட்டியை ட்ரா செய்ய நியூசிலாந்துக்கு உதவியது. அதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என கைப்பற்றியது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs New Zealand Virat Kohli Sports Cricket Ishant Sharma Zaheer Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment