/tamil-ie/media/media_files/uploads/2018/07/s828.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் எந்த தொடராக இருந்தாலும், தோனி முதல் பும்ரா வரை யோ-யோ எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான், அணியில் இடம் பெற முடியும். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்படும் இந்த தேர்வில், வீரர்கள் தோல்வி அடைந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் அவுட் தான். ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நடப்பு இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகியிருந்த அம்பதி ராயுடு, யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி, வீரர்களின் ஃபார்ம் எப்படி இருந்தாலும், தேர்வில் தோல்வி அடைந்தால், வெளியே தான் செல்ல வேண்டும் என நிலை உள்ளதால், பல முன்னாள் வீரர்கள் இதற்கு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானோ, யோ-யோ தேர்வின் தரத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யோ - யோ தேர்வில் 16.1 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அளவுகோல் வைத்துள்ளனர். ஆனால், இதையே சில வீரர்களால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. சர்வதேச தரத்தில் விளையாடும் வீரர்களுக்கான அளவுகோலை மேலும் அதிகப்படுத்த வேண்டும். இந்த ஸ்கோர், ஜூனியர் லெவல் கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன?
இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.
இந்த டெஸ்டில், இந்திய சீனியர் மற்றும் இந்திய ஏ அணி வீரர்கள் 16.1 மார்க் எடுத்தே ஆக வேண்டும். இதுதான் பென்ச்மார்க். இதற்கு கீழ் எடுத்தால் தோல்வி தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.