Advertisment

4 வீரர்கள் டக் அவுட்; 13 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே: இந்தியா அதிர்ச்சி தோல்வி

டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு 116 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Zimbabwe set a target of 116 runs for India in T20 cricket match

டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு 116 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா vs ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் போட்டி : ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டத்தில் இந்தியா அணி தடுமாறி வருகிறது. இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்துவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட் செய்ய பணித்தது.

அந்த அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் கிளைவ் 25 பந்துகளில் 4 பவுண்டரி உடன் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து டியான் மையர்ஸ் 23 ரன்னும், பிரைன் பென்னட் 22 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் மாதேவரே 21 ரன்னும் எடுத்தனர். ஷிக்கந்தர் ராஸா 19 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட் செய்கிறது.

இந்திய அணி 4.4 ஓவர்களில் 22 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 0 ரன்னில் நடையை கட்டினார்.

Advertisment

இந்தியா தோல்வி

அவருக்கு பின்னர் ருதுராஜ் கெய்க்வார்ட் 7 ரன்னிலும், ரியான் பராக் 2 ரன்னிலும் பெவிலியனுக்கு நடையை கட்டினார்கள். சுப்மன் கில் தன் பங்குக்கு 31 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்க பலமாக வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தார். அவிஸ் கான் 16 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள்.

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், முகேஷ் குமார், கலீல் அஹமது ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்து இருந்தது.

ஜம்பாப்வே தரப்பில் டென்டாய் சதாரா மற்றும் ஷிக்கந்தர் ராஸா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பிரைன் பென்னட், வெலிங்டன் மஸகட்ஸா, லுகே ஜோன்வி, பிளஸிங் முசாராபானி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி2 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

cricket news Zimbabwe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment