ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெர்த் மைதானத்தில் விளையாடியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஹைதர் அலி, பெப்சி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் இடம்பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே அணியில் கிரேக் எர்வின் (கே) ரெஜிஸ், வெஸ்லி மாதேவேரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன், ரியான் பர்ல், லூக், ரிச்சர்டு, பிராட் எவன்ஸ், பிளெஸ்சிங் முசரபானி ஆகியோர் இடம் பெற்றனர்.
ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வெஸ்லி மதேவேரே 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஹமது வாசிம் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மில்டன் ஷுமா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ஷஹாப் கான் பந்தில் காட் அண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். கிரைக் எர்வின் 19 ரன் எடுத்திருந்தபோது ஹரிஸ் ராஃப் பந்தில் முஹமது வாசிம் இடம் கேட்ச் கொடுத்து வெலியேறினார்.
ஜிம்பாப்வே அணியின் சேன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷஹாப் கான் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். இதனால், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம், 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முஹமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசம் களம் இறங்கினர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே விக்கேட்டுகளை இழந்தனர். பாபர் அசம் 4 ரன்னிலும், முஹமது ரிஸ்வான் 14 ரன்னிலும் ஷான் மசூத் 44 ரன்னிலும் இஃப்திகார் அஹமது 5 ரன்னிலும் ஷஹாப் கான் 17 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஹைதர் அலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். முஹமது நவாஸ் 22 ரன்களும் ஷாஹீன் அஃப்ரிடி 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள். முஹமது வாசிம் 12 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் சிகந்தர் ராசா 3 விக்கெட்களும், பிராட்லே நெயில் இவான்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இந்திய அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், ஜிம்பாப்வேயுடனான போட்டியிலும் தோல்வியைத் தழுவி ஷாக் ஆகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.