Zimbabwe highest total in T20 International History: காம்பியா - ஜிம்பாப்வே இடையே டி20 உலகக் கோப்பைக்கான ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகளை இழந்து 344 எடுத்து டி20 போட்டிகளில் மிக அதிகபட்ச ரன் அடித்து உலக சாதனை படைத்துள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து டி20ஐ போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா குவாலிஃபையர் குரூப் பி போட்டியில் ஜிம்பாப்வே உலக சாதனை படைத்துள்ளது.
இரண்டாவது பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, காம்பியா அணியை 54 ரன்களில் சுருட்டி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில், 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அணியில், தடிவானாஷே மருமணி (19 பந்துகளில் 62 ரன்கள்) மற்றும் கிளைவ் மடாண்டே (17 பந்துகளில் 53*) ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால்தான் ஜிம்பாப்வே உலக சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்தபோது, டெஸ்ட் போட்டி விளையாடும் நாட்டின் வீரர் அடித்த வேகமான டி20 சதம் என்ற ரோஹித் சர்மா சாதனையை முறியடித்தார். சிக்கந்தர் ராசா 7 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களை அடித்தார்.
காம்பியா அணியில் ஆன்ட்ரே ஜார்ஜு மட்டும் 12 ரன்கள் அடித்து இரட்டை இலக்கங்களை எட்டினார். மற்ற வீரர்கள் ஃபிராங்க் கேம்ப்பெல் மற்றும் அசிம் அஷ்ரஃப் ஆகியோர் தலா ஏழு ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிராண்டன் மவுடா, ரிச்சர்ட் நிகரவா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2023-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் அணி, மங்கோலியாவுக்கு எதிராக 314/3 ரன்களை எடுத்ததே முந்தைய சாதனையாக அமைந்தது. இந்த சாதனையை ஜிம்பாப்வே அணி முறியடித்து, டி20 போட்டியில் 344 ரன்கள் அதிகபட்ச ரன் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“