மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை சேர்க்கும் முடிவு தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டது. அதன்படி, ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதற்கிடையில், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இந்த நிலையில், விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் இம்மாதம் 15ம் தேதி முதல் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை வட்டாசியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் 2023ஆம் ஆண்டு செப். 15ம் தேதி தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“