Advertisment

10.5 % இட ஒதுக்கீடு: ’சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார்’: ராமதாஸ்

10.5 % இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ராமதாஸ்

ராமதாஸ்

10.5 % இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் , திண்டிவனத்தில் நடைபெற்றது. அதில், பாமக நிறுவனர் ராமதாஸ்,  கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “ தமிழகத்தில் பெரிய வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப பா.ம.க-வால் மட்டும் முடியும். தமிழக மக்களுக்கு பா.ம.க-வை விட்டால் வேறு வழியில்லை” என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்து ராமதாஸ் பேசுகையில் “வயசுப் பிள்ளைகள் என்னிடம் தொலைப்பேசியில் பேசும்போது, 10.5% இட ஒதுக்கீடு குறித்து கேட்கிறார்கள். அவர்களிடம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று கூறினேன். இப்போது சொல்கிறேன். 10.5 % இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment