Advertisment

தென் மாவட்டங்களில் வெள்ளம்... இதுவரை 10 பேர் பலி : நிவாரண பணிகள் தீவிரம்

தென் மாவட்டங்கில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1,343 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
 Tirunelveli district on Tuesday

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை வெள்ளத்தில் மூழ்கியது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : 10 dead, rescue & relief ops launched in 5 Tamil Nadu districts

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வாரத்தில் சென்னையில் பெய்த கனமழையால், பல பகுதிகளில் நீரில் மூழ்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதில் குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் அதிகனமழையினால், தூத்தக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு படைகள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேரு உயிரிழந்துள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த மழையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 12,600 பேர் பாதுகாப்பாக 141 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1,343 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சுமார் 34,000 உணவுப் பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, நீர்மட்டம் இன்னும் குறையாததால் சில கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று மாலை (டிசம்பர் 19) 85,000 உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மாநில அரசு தயார் செய்துள்ளது. தென் தமிழகத்தின் தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் சிக்கித் தவித்த 809 பயணிகள் மீட்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நேற்று மாலை வரை, 809 பயணிகளில், 509 பேர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்ற 300 ரயில் பயணிகளில் 270 பேர் அருகில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தாங்களாகவே வெளியேறினர். "மீதமுள்ள 30 பயணிகளும் ஆர்.பி.எஃப் உதவியுடன் அவர்களின் சொந்த ஊருக்கு சாலை வழியாக மணியாச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், மூன்று ஐஏஎஃப் (IAF) ஹெலிகாப்டர்கள், சுமார் 3 கி.மீ தூரம் முழங்கால் மட்டத்திற்குக் கீழே இருந்த தண்ணீரில் அலைந்து திரிந்த பயணிகளுக்கு உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் வழங்கியுள்ளனர். டிசம்பர் 17, திருச்செந்தூர்-சென்னை எழும்பூர், செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் மற்றும் அருகிலுள்ள ஒரு பள்ளி ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டுள்ளவர்களில் 9 அமைச்சர்கள் மற்றும் 2 டஜன் மூத்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  தூத்துக்குடி பகுதி முழுவதும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் தடையை எதிர்கொள்வதால் கிராமங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க காவல்துறைக்காக 300 வயர்லெஸ் பெட்டிகள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட படகுகள் மீட்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே தென் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை ராஜ்பவனில் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு மத்திய அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உத்திகள் குறித்து விவாதிக்கின்றனர்.

இதில் நேற்று சுமார் 168 ராணுவ வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இந்திய விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையிலிருந்து தலா இரண்டு ஹெலிகாப்டர்கள் நேற்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இது குறித்து மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment