தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால், வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66.1 அடியை எட்டியுள்ளது. இதனால் முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“