முட்டை வியாபாரியிடம் 10 லட்சம் கொள்ளை; 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்

வளசரவாக்கம் முட்டை வியாபாரியிடம் 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

வளசரவாக்கம் முட்டை வியாபாரியிடம் 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
namakkal

சென்னை, வளசரவாக்கம், வேலன் நகரைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி செல்வராஜின் நிறுவனத்தில், நாமக்கல் பண்ணையாளர்களுக்கு முட்டை கொள்முதல் செய்ய கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூவர் கொண்ட கும்பலை விக்கிரவாண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய் 9 லட்சத்து 60 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisment

நேற்று, ஜூலை 23, 2025 அன்று, சென்னை வானகரம், விநாயகர் கோவில் தெருவில் இயங்கும் "AVP EGG TRADERS" நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் சப்தகிரி (32), ஜூலை 22, 2025 இரவு 9 மணிக்கு, TN22DA0927 பதிவு எண் கொண்ட டாடா 1109 ரக லாரியில் காலி முட்டை தட்டுகளை ஏற்றி நாமக்கல்லுக்கு முட்டை கொள்முதல் செய்ய புறப்பட்டதாக தெரிவித்தார்.

theft

ஜூலை 23, 2025 அதிகாலை, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடுத்த மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் இயற்கை உபாதை கழிக்க ஓட்டுநர் சப்தகிரி வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, பதிவு எண் தெரியாத வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், சப்தகிரியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, லாரியில் இருந்த ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தகவலை ஓட்டுநர் சப்தகிரி தொலைபேசி மூலம் தனக்கு தெரிவித்ததாக செல்வராஜ் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

புகாரின் பேரில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சண்முகம் மற்றும் காவலர்கள் பிரதீப்குமார், செந்தில்குமார், மணிமாறன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், TN49 BP 1001 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை நிற இனோவா காரில் வந்த மூன்று நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இன்று, ஜூலை 24, 2025 அன்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் எதிரில் நின்றிருந்த TN49BP1001 இனோவா காரை காவல்துறையினர் சோதனையிட்டனர். காரில், பிரவீன் கோயிலராஜ் (த/பெ. செல்வம், நடுத்தெரு, கீழ்கருவேலன்குளம், களக்காடு, திருநெல்வேலி, தற்போது அங்கையர்கண்ணி தெரு, ஜீவா நகர், மதுரை), முத்துக்குமார் (த/பெ. ரவி, ER நகர், குத்தனூர், மாடம்பாக்கம், சென்னை), மற்றும் சதீஷ் (த/பெ. கோபால், ஆற்காடுபாட்டை, நந்தம்பாக்கம் குடியிருப்பு, காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது ஸ்ரீராம் நகர், ராமாபுரம், சென்னை) ஆகியோர் இருந்தனர்.

அவர்களை விசாரித்தபோது, அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் செலவு செய்தது போக, மீதமிருந்த ரூபாய் 9 லட்சத்து 60 ஆயிரம் மீட்கப்பட்டது.

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: