Advertisment

கொரோனாவை ஜெயிக்கும் கோவையைச் சேர்ந்த 10 மாத குழந்தை

கடந்த மார்ச் 29ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 10 மாத கைக்குழந்தை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
child birth, foetus, male-female ratio, maternity care, neonatal care, pregnancy, pregnant women, prenatal care, reproductive health, stress, stress in women

இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் செய்திகளை நாம்  அவ்வப்போது கேட்டு வந்திருப்போம். முதலாவதாக, துபாய் வழியாக கொச்சிக்கு விரைந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப்  பின், குழந்தை உட்பட  அந்த பெற்றோரும், குணமடைந்து வீடு திரும்பினர்.

Advertisment

தமிழ்நாட்டிலும், இதுபோன்று நம்பிக்கையளிக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த மார்ச்- 29 அன்று  கோயம்பத்தூரில் 10 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பிரிவில் அனுமதிக்கப் பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர் . அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, குழந்தையின் தாய், பாட்டி, அவர்களின் வீட்டு உதவியாளர்  மற்றும் 25 வயது மாணவர் ஆகியோர் அனுமதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து, கண்காணிப்பில் இருந்த கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, இவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை அறிவித்தது.

கொரோனா ஆய்வு: கர்ப்பிணிகள் போதிய கண்காணிப்பில் இருக்க வேண்டுமா?

இதன் மூலம், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை  பெற்று டிஸ்சார்ஜ்  செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 12-க உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் , நேற்று ஒரு நாளில் மட்டும் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று  உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்வு பெற்றுள்ளது.  தமிழகத்தில் இதுவரையி ஆறு பேர் கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துள்ளனர்.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment