சீமான் வீட்டை தாக்க முயற்சி; பெட்ரோல் குண்டுகளுடன் சென்ற த.பெ.திகவினர் 10 பேர் கைது

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக சீமான் பேசியதையடுத்து பெட்ரோல் குண்டுகளுடன் சீமான் வீட்டை தாக்க சென்ற த.பெ.கவை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Court orders to file case against seeman

சீமான் வீட்டை தாக்க முயற்சி - 10 பேர் கைது

சீமான் வீட்டில் வீசுவதற்காக, பெட்ரோல் குண்டுகளுடன் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. 

இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் தொடர்ந்து கருத்துகளை சீமான் தெரிவித்து வருவதால், அவர் மீதோ, அவரது வீடு, உடமைகள் மீதோ தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருணுக்கு உளவுப்பிரிவு போலீஸார் ரகசிய தகவல் தெரிவித்த நிலையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. 

அதன்படி, ராயப்பேட்டை போலீஸார், அவர்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிலர் பெட்ரோல் குண்டுகளுடன் பதுங்கி இருப்பதாகவும், அவற்றை சீமான் வீட்டின் மீது வீச திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விடுதிக்குள் ராயப்பேட்டை போலீஸார் சோதனை நடத்தினர்.

Advertisment
Advertisements

ஆனால், அதற்கு முன்னதாகவே 10 பேர் கொண்ட அந்தக் கும்பல் 4 இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் நீலாங்கரை போலீஸாரின் வாகன சோதனையில் 4 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கும்பல் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

போலீஸாரின் விசாரணையில் அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டச் செயலாளரான, ராயப்பேட்டை சைவ முத்தையா 5 ஆவது தெருவைச் சேர்ந்த குமரன் என்ற டிங்கர் குமரன் (45), அவரது கூட்டாளிகள் அதே அமைப்பைச் சேர்ந்த விருகம்பாக்கம் பகுதி துணைச் செயலாளர் சுரேஷ் (28), ஈரோடு சந்திரன் (34), மயிலாப்பூர் கோபி (27), ராயப்பேட்டை பிரசாந்த் (27), சேத்துப்பட்டு சக்திவேல் (23), கேவை சித்தாபுரம் ரஞ்சித் (41), ராயப்பேட்டை மணிகண்டன் (24), தீபக் (34), ராஜா என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து சீமான் வீட்டில் வீசுவதற்காகக் கொண்டு சென்ற 4 பெட்ரோல் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் 10 பேரையும் போலீசார் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Seeman Arrest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: