இப்படி புக் செய்தால் 10% கட்டணம் தள்ளுபடி: தமிழக அரசு விரைவு பஸ்களில் அதிரடி சலுகை

Tamil Nadu News: தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் பயணிப்போருக்கு பயணச்சீட்டில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இப்படி புக் செய்தால் 10% கட்டணம் தள்ளுபடி: தமிழக அரசு விரைவு பஸ்களில் அதிரடி சலுகை
விரைவு பேருந்துகளில் 10% தள்ளுபடி (Source: TNSTC)

Tamil Nadu News: தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் இருவழிப் பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால், பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு கீழ் 1,082 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அவை, அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்து ஆகியவை இயங்குகின்றன. 

இவை தமிழ்நாட்டை அடுத்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் 251 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மக்கள் தொலைதூரங்களுக்கு பயணப்பட விரும்பினால் அதை ஊக்குவிப்பதற்கும், விழா நாட்களில் பயணிப்பதற்கு உதவுமாறு இந்த இணையதளத்தில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலமாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, விழா நாட்களில் இந்த சலுகை செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 10 percent discount on tamil nadu deluxe buses

Exit mobile version