சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த 10 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் உயிரிழந்த விவகாரத்தில் அந்த நீச்சல்குளத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னையின் ரெட்டேரி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் ராணி தம்பிதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயது சிறுவனான இவர் ஆட்சம் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தையாவார்.
இந்த சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். சிறுவன் வழக்கம் போல, நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்கு சென்ற நிலையில், சிறுவன் கீர்த்தி சபரீஸ்கர் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பலியானார்.
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீச்சல் குளத்தில் சிறுவனுக்கு முறையான பயிற்சி அளிக்காமல், வாய் பேச முடியாத சிறுவன் சைகை காட்டியும் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீச்சல் குளத்தில், உயிரிழந்த சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“