சென்னை எம்ஜிஆர் நகரில், தாயின் தகாத உறவினால் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யபட்டுள்ள சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகேயன்-மஞ்சுளா தம்பதிக்கு ரித்தேஷ் சாய் என்ற 10 வயது சிறுவன் இருந்துள்ளான். இவர்கள் மூவரும் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர். மஞ்சுளா சென்னை மின்சார வாரியத்தில் பணிப்புரிந்து வந்தார். இவருக்கும் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நாகராஜன் என்ற வாலிபருக்கும் சில மாதங்களாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த உறவின் காரணமாக, மாலை நேரங்களில் டியூசனிற்கு செல்லும் சிறுவன் சாயை, மஞ்சுளா மற்றும் நாகராஜ் இணைந்து கூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே, டியூசன் டீச்சர் நாகராஜ் சாயின் உறவினர் என நினைத்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட நாகராஜ், நேற்று முன் தினம், (28.2.18) சிறுவனின் டியூசன் வகுப்பிற்கு சென்று அவர்களின் பெற்றோர் அழைத்து வரச் சொன்னதாக கூறி சாயை அழைத்து வந்துள்ளான் .
பின்பு, அவனை சேலையூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளான். இரவு 8. மணியாகியும் டியூசன் சென்ற சாய் வீடு திரும்பாததால் சிறுவனின் தந்தை பதற்றத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், மறுநாள் காலை (1.3.18) நாகராஜ் சிறுவன் சாய்யை கழுத்தறுத்து கொலை செய்தை கண்டுப்பிடித்தனர்.
மேலும், நாகராஜனை வேலூர் அருகே மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்பு அவனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.நாகராஜுக்கும், சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததும் அதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவனை கொலை செய்ததாக நாகராஜ் போலீசாரிடம் கூறியுள்ளான்.
இதைக் கேட்ட சிறுவனின் தந்தை, அலறித் துடித்துள்ளார். மேலும், தனது மகனின் கொலைக்கு மனைவி மஞ்சுளா காரணமாக இருந்தாலும் அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுவன் கொலையில் தாய் மஞ்சுளா உடந்தையாக இருந்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் மஞ்சுளாவை இன்று (2.3.18) கைது செய்துள்ளனர்.