100 யுனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு வீட்டு உரிமையாளுருக்கு 1-க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் மட்டுமே மானியம் என்றும், வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து என்றும், ஆனால் அதே நேரத்தில் வீட்டின் உரிமையாளர் வாடைக்கு வீட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என்றும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களில் சமூகவலைளத்தில் ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முன் இணைப்புகள் இருந்தால் ஒரு வீட்டிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் மற்ற வீடுகளுக்கு மானியம் வழங்கப்படாது என்றும் வந்ததி பரவியது குறிப்பிடதக்கது.