Advertisment

மகளிர் உரிமைத் தொகை: ரூ.1000 எஸ்.எம்.எஸ் எப்போது வரும்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு தனி ஏ.டி.எம் கார்டு கலர்ஃபுல் ஏ.டி.எம் கார்டு படம் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Validation of Women Financial Assistance Scheme has started

தி.மு.க. நிறுவனர் அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம் தொடங்கப்பட உள்ளது.

Tamilnadu Government : தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம் தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை  காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

Advertisment

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு தனி ஏ.டி.எம் கார்டு கலர்ஃபுல் ஏ.டி.எம் கார்டு படம் வெளியாகியுள்ளது.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன.

அதில் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.

ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாள்களுக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

இந்தத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கப்பட உடன் ரூ.1000 பணம் அக்டோபர் மாதம் முதல், முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் தகவல்கள் வழங்கப்பட உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment