108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் எதிர்த்து தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. போராட்டத்தை ஊழியர்கள் வாபஸ் பெற்றதையடுத்து நீதிபதில் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 750 ஊழியகள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். எனவே இந்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதமானது என்றும் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது போனஸ் கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த வேலை நிறுத்தை சட்ட விரோதமானது என கூறி தடை செய்தது
இதன் மூலம் மருத்துவ அவசர சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே நாளை (இன்று 08.06.2018) முதல் நடைப்பெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊதிய உயர்வு தொடர்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடன் நேற்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று முதல் நடைபெறுவதாக அறிவித்த காலவரையறை வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கடிதத்தை அவர் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு தற்போதைய நிலையில் செல்லாது என அறிவித்து மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.