Advertisment

'நாங்க என்ன சார் பாவம் பண்ணோம்' - 10th தேர்வு ரத்து, கல்லூரி மாணவர்களின் கண்ணீர் மீம்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10th exam canceled, 10th exam canceled memes, 10th exam, tamil nadu 10th exam, college semester, பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து,

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், சமூக தளங்களில் 90'ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் இடையே பெரும் போரே நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து கேள்வி எழுந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து, அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் இன்று 1,685 பேருக்கு கொரோனா - 21 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

ஆனால், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது சரியாக இருக்காது என கண்டனங்கள் எழுந்தது மட்டுமல்லாமல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், தேர்வு ரத்து குறித்து சமூக தளங்களில் மீம்ஸ் ரகரகமாக வலம் வருகின்றன.

9, 2020

9, 2020

9, 2020

9, 2020

9, 2020

9, 2020

9, 2020

9, 2020

40 50 மதிப்பெண்ணாக இருந்தாலும் யாருடைய தயவிலும் இல்லாமல் சொந்தமாக படித்து சொந்தக் காலில் நின்று பாஸ் ஆனவர்கள் 90's கிட்ஸ்.

கொரொனாவின் தயவில் பாஸ் ஆனவர்கள் என்று நாளை வரலாறு ஏளனம் செய்யும் 2K கிட்ஸை பார்த்து.

Proud to be 90's Kids...

publive-image

இப்படியாக மீம்ஸ்கள் சமூக தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுவைப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

இதனால், தமிழக அரசு தங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும் என்பதே தமிழக கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment