10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் நடக்கும். ஒருநாள் நடக்காமல் போன பிளஸ் 2 தேர்வும் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By: Published: April 20, 2020, 8:37:25 PM

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் நடக்கும். ஒருநாள் நடக்காமல் போன பிளஸ் 2 தேர்வும் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: “10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். 10 வகுப்புத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு 10-ம் வகுப்புத் தேர்வை எப்படி நடத்தலாம் என்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

இப்போதைய நிலைக்கு கோடை காலத்தில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதிக்குப் பிறகு சகஜமான நிலை ஏற்படும். அதன் பின்னர் மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

மாணவர்கள் 11-ம் வகுப்பில் உரிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும், பாலிடெக்னிக் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கும், TNPSC உள்ளிட்ட தேர்வுகள் எழுதுவதற்கும் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானது.

ஆகவே, 10-ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே இடைவெளி இருக்கும். இது முடிந்தவுடன் 12-ம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கும். ஒருநாள் விட்டுப்போன பிளஸ் 2 தேர்வு மீண்டும் ஒரு நாள் நடத்தப்படும்.

தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அதை மீறி யாராவது கட்டாயமாக கட்டணம் வசூல் செய்தால் அது அரசின் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:10th public exam will conducted compulsory minister sengottaiyan press meet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X