சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“