சென்னை விமான நிலையத்தில் இளைஞரிடத்தில், 11 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள ஹெராயின் வகை போதைப்பொருளை அதிகாரிகள் பறிதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“