ஆம்னி பேருந்துகள் பறிமுதல் : பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, தமிழகத்தின் பெருநகரங்களில் வசிப்பவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றார்கள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் வருகின்ற 5 நாட்களுக்கும் செயல்படும். அதற்கான முன்பதிவு இடங்கள், போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை துரித கதியில் செய்து வருகிறது.
மேலும் படிக்க : பொங்கலன்று சொந்த ஊர் செல்பவர்களின் கவனத்திற்கு : சென்னையில் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு எங்கே ?
ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
தனியார் பேருந்துகளும் இந்நாட்களில் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களுக்கும் அதிகமாக பயணிகளிடம் இருந்து பெறுவதும் வாடிக்கையாகிக் கொண்டே வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 பேருந்துகளை பறிமுதல் செய்திருக்கிறது தமிழக அரசு. கூடுதல் கட்டணம் வசூலித்தாக வந்த புகாரின் அடிப்படையில் சுமார் 861 ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பேருந்து நிறுவனங்களிடம் இருந்து சுமார் 18 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலாக 3,15,000 பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஏதேனும் சிரமங்கள் இருக்கின்றதா என்று ஆய்வுகளை நேற்று கோயம்பேட்டில் மேற்கொண்டார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.