நாமக்கல் மாவட்டம் எருமை பட்டி அருகே காளி செட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன். இவர் லாரி டிரைவாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கெளசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் கடந்த ஆறு வருடமாக முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்
நேற்று முன்தினம் இரவு வீட்டு மொட்டை மாடியில் கௌசல்யா தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கெளசல்யா மற்றும் சிறுமியின் சகோதரர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு, சிறுமியை தூக்கிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சிறுமியை மீட்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருந்தது. சிசிடிவி காட்டுகளை கொண்டு தேடுதல் பணி மும்முரமாக நடைபெற்றது.
இதற்கிடையில், வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு போன் செய்து சிறுமி உயிருடன் வேண்டும் என்றால் 50 லட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டி உள்ளனர்.
பின்னர், காவல் துறையின் அதிரடி நடவடிக்கையில், அலங்காநத்தம் அருகே கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்தியதாக உறவினர்கள் மணிகண்டன், பொன்னுமணி தம்பதியை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசிடம் மாட்டிக்கொள்வோம் பயத்தில் பெட்ரோல் நிலையத்தில் சிறுமியை இறக்கிவிட்டு தம்பதி தப்பிச் சென்ற போது, காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil