கோவையில் மட்டும் 34,000 பேர்… தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு தொடக்கம்

கோவையில் 34,390 மாணவ மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

கோவையில் மட்டும் 34,000 பேர்… தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 14) முதல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழித் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 128 தேர்வு மையங்களில் 11-ம் வகுப்பு தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 362 பள்ளிகளைச் சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

கண்காணிப்பிற்காக 175 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தி:பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 11th class board exam begins in tamilnadu

Exit mobile version