Advertisment

18+ தடுப்பூசி; 12.85 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு வழங்கிய தமிழக சுகாதாரத்துறை

12.85 lakhs vaccine distributed to districts for 18 years above in tamil nadu: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக மாநில மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை 12.85 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு விநியோகித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Vaccine inequity deepens in young 85 of those jabbed are in just seven states

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்காக 12.85 லட்சம் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ்நாடு மாநில மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அனுப்பியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35,000 தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக மாநில மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை 12.85 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு விநியோகித்துள்ளது.

Advertisment
Advertisement

பொது சுகாதார இயக்குநர் டி.எஸ்.செல்வவினாயகம் தடுப்பூசி தேவைப்படும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுமாறு துணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை ஒரு வாரத்தில் முடிக்குமாறு துணை இயக்குனர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவர்களை வரச் சொல்வதைக் காட்டிலும் ஒவ்வொரு வகையையும் உள்ளடக்கிய முகாம்களை குறிப்பிட்ட இடத்தில் அல்லது நேரத்தில் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது அவர்களின் செயல்திறனை உள்ளிடுவதற்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் இணைக்கப்பட வேண்டும், என்று செல்வவினாயகம் கூறியுள்ளார்.

சங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் துறைகளின் தலைவர் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சிறந்த ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி வீணாவதை குறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Corona Vaccine Update Corona Corona Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment