கோவை காரமடையை அடுத்துள்ள ஆதிமாதையனூர் பகுதியில் லட்சுமி (56) என்பவரது விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று வலையில் சிக்கிய நிலையில் படுத்திருப்பதாக காரமடை வனச்சரகர் ரஞ்சித்திற்கு தகவல் வந்துள்ளது.
அதன்பேரில் வனவர் சகாதேவன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டனர். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை பத்திரமாக வலையை அறுத்து மீட்டனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அதனை வனச்சரகர் ரஞ்சித் உத்தரவின் பேரில் அத்திக்கடவு காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“