Advertisment

நடுக்கடலில் மோதிய இழுவை கப்பல்: தத்தளித்த குமரி மீனவர்கள்.. கைகொடுத்த மாலத்தீவு

நடுக்கடலில் இழுவை கப்பல் மோதியதால் படகு உடைந்து நடுக்கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்களுக்கு மாலத்தீவு கடற்படையினர் கைகொடுத்து காப்பாற்றி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
kanyakumari fishermen issue

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Kanyakumari fishermen issue : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் மீனவ படகு உரிமையாளர் மற்றும் மீனவர்கள் புதன்கிழமை (செப்.13) மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “ கன்னியாகுமரி தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த பைஜூ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 7ஆம் தேதி 12 மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Advertisment

ஆழ்கடலில் பிடித்த மீன்களுடன் மீண்டும் தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மீனவர்களின் விசைப்படகு வந்த கடல் பகுதி வழியாக தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் திடீரென மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. அதனுடன் மீனவர் பிடித்து வந்த அத்தனை மீன்களும் கடலில் சிதறி விட்டன.
மீனவர்களும் படுகாயம் அடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை மாலத்தீவு கடற்படையினர் காப்பாற்றினார்கள்” எனத் தெரிவித்திருந்தனர்.

மேலும், “தீவில் இருக்கும் மீனவர்களை மீட்டு வர வேண்டும் எனவும், மீனவர்கள் பிடித்து வந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மோதிய கப்பலை அடையாளம் கண்டு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் த.இ.தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kanyakumari Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment