தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய குடும்பத் தலைவி ஒருவர், “அமைச்சரின் இந்த நடவடிக்கயை உளமாற வரவேற்கிறோம். அவரின் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்” என்றார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், அவர் வகித்த பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் இந்த 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடலை நடைமுறைப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“