12 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வயது ஆன குழந்தையை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் முதியவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாலையில் குழந்தையின் குடும்பத்திற்கு சொந்தமான கறவை மாடு தனது வயலில் நிற்பதாக கூறி அழைத்துச் சென்று ஓடையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த மணி என்பவர் மீது சிறுமியின் பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
விசாரணை முடித்து போலீசார் பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜராகி வழக்கை நடத்தினார்.
வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி மேற்படி வழக்கில் அரசு தரப்பில் மணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கி விவசாயி மணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“