/tamil-ie/media/media_files/uploads/2020/04/image-27.jpg)
கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி, அதன் தொடர்ச்சியாக பொது முடக்க நிலை அமல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சிக்கத்தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம்,400-க்கும் அதிகமான தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள், ஆன்மீக சுற்றுலா பயணமாக உத்தர பிரேதேசம் மாநிலம் வாரணாசிக்கு பயணம் செய்திருக்கின்றனர். பின்பு, தொடர்ச்சியாக ஏற்பட்ட அசாதாராண நிலையால், அவர்கள் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்து.
காசி நாட்டுக்கோட்டை சத்திரம்,கங்கை கரையில் அமைந்திருக்கும் குமாரசாமி மடம், வாரணாசி மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு தொடர்ச்சியாக உணவும், உறைவிடமும் அளித்து வந்தது.
இந்நிலையில், சிக்கிதவித்த பெரும்பாலானவர்களில் முதியவர்களாக இருகின்றனர். அவர்களுக்கு உணவு, இருப்பிடத்தைத் தாண்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியும் திரும்ப வேண்டும் என்ற உணர்வு நாளுக்கு நாள் மனதில் எழ ஆரம்பித்துள்ளது. அவர்களின், சொல்ல முடியாத வேதனைகளை புரிந்து கொண்ட வாரணாசி மாவட்ட நிர்வாகம் தங்களது சொந்த பணத்தில் மூன்று பேருந்துக்களில் நேற்று 127 மக்களை வழியனுப்பி வைத்துள்ளது. மூன்று மாநிலங்கள், 1600 கிலோ மீட்டர் கடந்து இவர்கள் நாளை காலை தமிழகம் வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீண்ட பயணத்தின் போது வழியில் இவர்கள் எங்கும் இறங்க அனுமதி இல்லையென்பதால், பிஸ்கட், பிரெட், குடிநீர் மற்றும் பழவகைகளும் குமாரசாமி மடம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.