மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. விட்டு விட்டு மழை பெய்வதால் பழையாறு சுனாமி குடியிருப்பு, பூம்புகார் குடியிருப்பு பகுதிகள் பெருமாள் பேட்டை தரங்கம்பாடி ஆகிய கடலோர கிராமங்கள் மற்றும் சீர்காழி நகரில் உள்ள புதிய மனை பிரிவுகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குளிச்சாரு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் 100 ஏக்கரில் இளம் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தவிர தற்போது வரை பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் 6வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 500 விசைப்படகுகள் 4000 பைபர் படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் ஆறுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். தொடர்ந்து மழை பெய்வதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தொடர் மழையின் காரணமாக தரங்கம்பாடி, பூம்புகார் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“