/tamil-ie/media/media_files/uploads/2023/05/suicide.jpg)
(Representational Image)
தமிழ்நாடு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொண்டு அதற்கேற்ற உயர்ப் படிப்பினை தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அருகே பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிளஸ்- 2 மாணவன் ஹரி, பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் தேர்வின் முடிவு வெளியிடும் நேரங்களில், மன அழுத்தத்தை கையாள மற்றும் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.