Tamil Nadu 12th Results @tnresults.nic.in : tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்கள் பார்க்கலாம்.
அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த
அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து பிளஸ் டூ ரிசல்ட் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது. தவறவிட்ட தேர்வு முடிந்து, அந்த விடைத்தாள்களை திருத்தி, அதன் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெளிவாகியிருக்கிறது.
முன்னதாக, ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூலை ஏழாம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அடுத்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஊரடங்கு காரணமாக தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வை நடத்திவிட்டு அதன் பிறகு முடிவை அறிவிக்கலாம் என்கிற ஆலோசனையும் இருப்பதாக தெரிகிறது. இதனாலேயே தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
12th Result Latest News: +2 தேர்வு ரிசல்ட் லேட்டஸ்ட் நியூஸ்
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களான tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ரிசல்ட்டைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதி முடிக்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவலால் பொது முடக்க அறிவிக்கப்பட்டது. இதனால், வணிகவியல் வேதியியல், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் எழுத முடியாமல் போனது. இதனால், தேர்வு நடைபெறாத பாடங்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் மற்றும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதோடு, கொரோனா பரவல் அச்சத்தால் தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடைபெற்றுவந்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவுபெற்ற நிலையில், இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்கள் தங்களுடைய ரிசல்ட்டை தெரிந்துகொள்ளும் ஆவலில் உள்ளனர்.
அதனால், பிளஸ் 2 மாணவர்கள் இணையதளத்தில் தங்களுடைய ரிசல்ட்டை தெரிந்துகொள்ள ஐ.இ தமிழ் வழிகாட்டுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய தளங்களில் ரிசல்ட்டைப் பார்க்கலாம்.
மாணவர்கள் இந்த இணையதளங்களுக்கு சென்று தேர்வு எண் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தால் உங்கள் மொபைல் போன்களுக்கு தேர்வு மதிப்பெண் ரிசல்ட் எஸ்.எம்.எஸ் வரும்.
ஏற்கனவே அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு படியும் அதிகாரிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாகும் என தெரியவந்தது. ஆனால் இன்று வெளியாகவில்லை. அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. எனினும் எந்த நேரமும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில் உரிய தகவல்களை ஐஇ தமிழ் வெளியிடும்.
ஜூலை 27-ல் கடைசித் தேர்வு: பிளஸ் டூ ரிசல்ட் இப்போது இல்லை
அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த
அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து பிளஸ் டூ ரிசல்ட் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது. தவறவிட்ட தேர்வு முடிந்து, அந்த விடைத்தாள்களை திருத்தி, அதன் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெளிவாகியிருக்கிறது.
Highlights
ஏற்கனவே அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு படியும் அதிகாரிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாகும் என தெரியவந்தது. ஆனால் இன்று வெளியாகவில்லை. அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. எனினும் எந்த நேரமும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில் உரிய தகவல்களை ஐஇ தமிழ் வெளியிடும்.
12ம் வகுப்பு தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குநரகம் (டிஜிஇ) இன்று அறிவிக்கும். “12ம் வகுப்பு தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். மாணவர்கள் dge.tn.gov.in, dge1.tn.nic.in, tnresults.nic.in என்ற வலைத்தளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்” என்று இயக்குனர் எம்.பழனிசாமியின் அலுவலகம் indianexpress.com இடம் கூறியது.
தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகாரிகள் இன்று 5 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை இன்னும் ரிசல்ட் வெளியாகவில்லை. அதனால், மாணவர்கள் இன்று பிளஸ் 2 ரிசல்ட் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.