வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்ட புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரை கடந்த போது மணிக்கு 75கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அதிகாலை புயல் முழுவதுமாக கரை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புயல் கரை கடந்து வலுவிழக்கத் தொடங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது. வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (டிசம்பர் 11) 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, தென்காசி, திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/