தமிழ்நாட்டில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு ஐ.ஜி தேன் மொழி போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, அரக்கோணம் ஏ.எஸ்.பி யாதவ் கிரிஷ் அசோக் எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி அதிவீர பாண்டியன் சென்னை போலீஸ் நிர்வாக துணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மதுரை தெற்கு துணை கமிஷனர் பாலாஜி, துணை ஐ.ஐி ஆகவும், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ரோகித் நாதன் கோவை போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆகவும், சென்னை பாதுகாப்பு துணை கமிஷனர் ஆக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் ஆகவும், திருச்சி வடக்கு துணை கமிஷனர் திருவள்ளூர் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லாவும், சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஆக திருச்சி வடக்கு துணை கமிஷனர் அன்பும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆக சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ். ரமேஷ் பாபுவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“